இயற்க்கையின் கை.

முதல்வரி

மனிதனுக்கு புதிர் போடுவதே இயற்கையோட மொதோ கடமை.
இயற்கை
அது போற போக்கில
அது சிமிட்ற சிமிட்டல்ல
மனுஷன உலுக்கிட்டு போகுது.காதலர் தினம் கொண்டாடிய அதே மக்கள்தான் முதல் வரிசயில் நிற்கனும் உலகப்போர்களில்….
என்ன ஒரு முரண்பாடு….உன் குடும்பம் உன் காதல் உன் தத்துவம் உன் கடவுள் உன் உள்ளாடை இதெல்லாம் பத்தி நீ வேனும்னா கவலப்படு….
நான் படமாட்டேன்னு தெனாவெட்டா பேசுது காலம்…cute_baby_girl_plant-wide

காலம்தான் எல்லாத்தையும் கலச்சி போடுது.
அதுல நல்ல சீட்டு வந்தா நீ ஜெயிச்ச…
இல்லனா அவன் ஜெயிச்சான்….
ஆனா உண்மைல நம்மட்ட வெளயாண்டு ஜெயிச்சிட்டு காலத்துக்கும் சிரிக்கிது காலம்….
நம்மள் ஜெயிக்க யாருமில்லேனு அதுக்கு தெரியுது.

நமக்கு நம்ம வாழ்க்க பெரிய விசயம்….
அத்தனையும் ஒரு க்‌ஷனத்ல அழிச்சி போட்ற காலத்துக்கு…
எல்லா வரியும் முதல் வரிதான்….

நம்மள ஜெயிக்க யாருமில்லேனு அதுக்கு தெரியுது…
இருக்கட்டுமே…
காலத்தோட சண்ட போடப்போறேன்.
ஏன்னா அதுக்கு எதுத்து சண்ட போட்றவனதான் பிடிக்கும்.
அவனதான் அது கொஞ்ச நாளாவது வச்சிக்கும்….

இப்பலேர்ந்து நான் எழுதுற எல்லா வரியும் முதல் வரிதான்.
ஏன்னா நான் காலமாகப் போறேன்….

Leave a comment