கடவுள்களின் பூமியும் அதன் வருங்கால வரலாறும்.

நூல்கள், வரலாறு

’நான் கடவுள்’ என்ற வாசகம் தரும் உணர்வினை சிந்திக்கும் திறனுள்ள அனைவரும் ஒரு போதாவது ரசித்திருப்போம். நாம் கடவுள்கள். இந்த வாசகம் எப்படிப்பட்ட உணர்வினை நமக்கு தருகிறது. நிச்சயம் முந்தையதைப் போன்ற உணர்வினை விடவும் சற்று குழப்பமிக்க உணர்வினையே தருகிறது. மனித இனம் Homo Sapiens என்ற நமது இனமாக இருந்து வருகிறது. இந்த இனம் சில நெருங்கிய மனித இனங்களை மீறி இந்த உலகில் நிலைத்தது. இந்த நிலைப்பிற்கு வெகு  விரைவிலேயே ஒரு எதிர்பாராத மாற்றம் காத்திருக்கிறது. இதை ரசிக்கும் வகையிலும் சற்றே பீதி ஏற்படுத்தும் வகையிலும் அசாத்திய உதாரணங்கள் மூலம் நிறுவும் வகையிலும் Yuval Noah Harari ன் புத்தகமான ஹோமோ டியஸ் (Homo Deus) வெளிவந்துள்ளது.

இதற்கு முந்தைய புத்தகமான சேப்பியன்ஸில் எழுபதாயிரமாண்டு கால மனித குல வரலாற்றை பேசிய ஹராரி, இந்த நூலில் சில பத்தாண்டுகள் அல்லது ஒரு நூற்றாண்டில் வரவிருக்கும் ஒரு புதிய புரட்சியைப் பற்றி பேசுகிறார். ( சேப்பியஸ் பற்றிய அறிமுக கட்டுரைக்கு https://kavingkamal.wordpress.com/2016/10/19/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/ )

இருபதாம் நூற்றாண்டு வரை நாம் உலகில் சந்தித்த பெரும் சவாலாக இருந்தவை, மூன்று : பஞ்சம், ப்ளேக் மற்றும் போர். இவை மூன்றும் உலகின் பல உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்தன. பஞ்சம் படுத்திய பாட்டின் ரணம் இன்னும் இந்தியா போன்ற நாடுகளில் ஆழ்மனதில் உறைந்துள்ளது. இதன் காரணமாகவே நாம் யாரைப் பார்த்தாலும் ‘சாப்டீங்களா?’ என்பதை முகமனாக கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.

அணுஆயுத உருவாக்கத்தால், இனியும் ஒரு உலகப்போர் மூள்வதற்க்கான சாத்தியங்கள் வெகு குறைவு என்பதை உளவியல் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் அணுகி நிறுவியுள்ளார் ஆசிரியர். சென்ற நூற்றாண்டின் ஆண்டிபயாடிக் கண்டுபிடிப்புகள் பல கோடி உயிர்களை இழப்பிலிருந்து தடுத்துள்ளது. இந்த நிலையில் க்ளாசிக் மதங்களும் அவை போதிக்கும் கடவுள்களும் இல்லாத உலகத்தை நோக்கியே நாம் பயணிக்கிறோம்.

ஆனால் இருபதாம் நூற்றாண்டின் பாடங்கள் மற்றும் அறிவியல் நுட்பங்களின் காரணமாக நாம் ஏறத்தாழ பஞ்சம், ப்ளேக் மற்றும் போரின் சவால்களை வென்றேவிட்டோம் என்று சொல்வதில் பிழையேதுமில்லை. அடுத்ததாக நாம் வென்றெடுக்க வேண்டிய நிகழ்வுகளாக உள்ள சவால்கள் மரணத்தை வெல்லுதல், மகிழ்ச்சியை  கையகப்படுத்துதல் மற்றும் கடவுளாதல்.

மரணத்தை வெல்லுதல் என்பது சமீபத்திய உறுப்பு மாற்று சிகிச்சைகளின் நீட்சியாகவும், தொழில் நுட்பத்தின் மருத்துவ பயன்பாட்டின் அடுத்த நிலையாகவும் இருக்கும். அதன் முதல் படியாக, வாழ்நாட்கள் சில நூறாண்டுகளாக மாற்றமுறும். மெல்ல மரணத்தை வென்று ஒவ்வொரு உறுப்பாக மாற்றபட்ட ஒரு மனிதனாக நாம் இருப்போம்.

மகிழ்ச்சி என்பது வெகு காலமாக தத்துவத்தின் அம்சமாக இருந்தது. எப்படிபட்ட மகிழ்வான தருணங்களை அனுபவித்தாலும், உண்மையில் மகிழ்ச்சி சில நிமிடங்களுக்கப்பால் நீள்வதில்லை. இதை உணர்ந்த புத்தர், வள்ளுவர் போன்றோர் மக்களுக்கு  உணர்த்தும் பொருட்டு இன்பம் விழையானை துன்பம் உறாதவன் என்று குறிப்பிடத்தவறவ்வில்லை. ஆனால் இன்றைய அறிவியல் இன்பம் உயிர்வேதி சேர்மங்களால் தூண்டப்படும் விளைவே மகிழ்ச்சி என்று கண்டறிந்துள்ளது. இதன் விளைவாக மனிதனை இன்பத்தில் ஆழ்த்தும் பணிகளை இந்நூற்றாண்டின் பிற்பகுதி ஏற்றுக் கொள்ளுமெனத் தெரிகிறது.

150 ஆண்டுகளுக்கு முன் டார்வினின் கொள்கைப்படி மனிதனது நிலை ஒரு அல்காரிதமாக மாற்றி சிந்திக்கப்பட்டுவருகிறது. மேலும் எண்பது ஆண்டுகளுக்கு மின் ஆலன் டுரிங் ‘டூரிங் மிஷிணை’ உருவாக்கிய பின்னர் – அவரது இமிடேஷன் கேம்’ என்ற கோட்பாட்டை உருவாக்கிய பின்னரும் – கம்ப்யூட்டர்கள் உருவாகி இயந்திரங்கள் சிந்திக்கும் திறம் பெற்றவையாக வலம் வருவதையும் கவனிக்க முடிகிறது. இவ்விரு நிலையிலேயே நாம் உயிர்களை உருவாக்கிடும் சூத்திரங்களைக் கண்டுபிடிக்கும் ஓரத்தில் இருக்கிறோம். இதனால் மனிதன் கடவுளின் இடத்தை அடைவான் – Homo Deus –  என்று சொல்லும் ஆசிரியர், விரைவிலேயே நாம் உருவாக்கிய கடவுள்கள் எக்ஸ்பிரி ஆனதைப் போல மனிதனும் கடவுளாகி விரைவில் எக்ஸ்பிரி ஆவான் என்பதையும் சுட்டத் தவறவில்லை.

homo_deus_banner_en

இந்நூல் மனிதனின் இருபத்தோறாம் நூற்றாண்டின் நிகழ்ச்சிகளைப் பட்டியலிட்டு அதை முன்னுரையாக உருவகித்துக் கொள்கிறது. பின் நூலில் மனிதன் உலகை வென்ற விதம், அவன் உலகிற்கு பொருள் அளித்த விதம் இரண்டையும் விரிவாக பேசுகிறது. கடைசியில் மனிதன் தனது சாதனைகளைத் தாண்டி தன் கட்டுபாட்டை எப்படி தரவுகளிடம் இழப்பான் என்பதையும், எப்படி புது மனிதர்களிடமோ, கடவுள்களிடமோ தன் பரிணாமத்தின் மிச்சத்தை வழங்கிவிட்டு எச்சமாவான் என்பதையும் வெகு சுவாரஸ்யமாகப் பேசுகிறது இந்நூல். கேள்விகளைப் பேசும் எந்த நூலுமே விரைவில் பதில்களை உருவாக்கும். அந்த விதத்தில் இது வெகு சிறப்பான கேள்விகளைக் கேட்கும் நூல்.

நண்பர்கள் அனைவரும் படித்து இந்நூலின் மீதான கருத்துக்களை விரித்து சிந்தித்திடவும் உரையாடிடவும் அழைக்கிறேன். இது ஏற்கனவே உலகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s